மலை கிராமங்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது அ.தி.மு.க: கே.பி.முனுசாமி..

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

மலை கிராமங்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது அ.தி.மு.க., மட்டுமே,” என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்ட-சபை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் முனுசாமி மகாராஜகடை, நாரலப்-பள்ளி, ஏக்கல்நத்தம் மலைகிராமங்களில் பிரச்-சாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: கடந்த, 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், தமிழ-கத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளிலும் ஈடுபட-வில்லை. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, தி.மு.க., ஆட்சியில் புதிய திட்-டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கென பல திட்டங்-களை அறிவித்தார்.

ராயக்கோட்டை பகுதியில் உள்ள ஆழியாளம் பகுதியில் இருந்து துாள்செட்டி ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க, 56 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம், எண்-ணேக்கொள் கால்வாய் திட்டத்திற்காக, 219 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், ஆழியாளம், எண்ணேக்கொள் கால்வாய் திட்டப்பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி, கெலமங்கலம் பகுதியில் தொடங்கப்பட்ட பிரபல தொழிற்சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வேலை பெற்றுள்ளனர். 

தி.மு.க., ஆட்-சியில் ஏதேனும் திட்டங்கள் கொண்டு வரப்பட்-டதா. மலை கிராமங்களுக்கே அ.தி.மு.க., ஆட்-சியில் தான் சாலைகள் முதல் அனைத்து திட்-டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது சாலை புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் வெற்றி பெற்று வந்தவுடன் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

See More

Latest Photos