நூறு வயது இளைஞருக்கு பிறந்தநாள் விழா கோலாகலம்...

Total Views : 1,076
Zoom In Zoom Out Read Later Print

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு தொழில் கொடுத்து வரும் நூறு வயது இளைஞருக்கு பிறந்தநாள் விழா கோலாகலம்...

சேலம் : இன்றைய காலகட்டத்தில் முதியோர்களுக்கு பெற்றெடுத்த சில பிள்ளைகள் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து வருவது கண்கூடான காட்சியாக உள்ளது.

இந்த காலக் கட்டத்தில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு தொழில் கொடுத்து வரும் நூறு வயது இளைஞருக்கு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நூறு வயது இளைஞரின் பெயர் அண்ணாமலை.இவரது மனைவியின் பெயர் பர்வதம்மாள். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஐந்து மகன்கள் உள்ளனர்.

ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த முத்துசாமி,பாப்பம்மாளுக்கு மகனாக பிறந்தவர்தான் அண்ணாமலை. இவருடைய படிப்பு மூன்றாம் வகுப்பு மட்டுமே.இவர் நெசவுத் தொழில் செய்து கொண்டு உள்ளூரில் இருக்கும் அனைவருக்கும் பல்வேறு விதமான சமூக கருத்துகளை சொல்லியும் வந்துள்ளார்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட

நெசவாளர்களுக்கு இவர் தொழில் ஏற்படுத்தி கொடுத்து வருவதுடன், அவர் தற்போதும் தறி நெய்கிறார்‌‌.
இந்த நிலையில் நூறு வயது இளைஞர் அண்ணாமலைக்கு உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பேரன்,பேத்திகள் என அனைவரும் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

See More

Latest Photos