கூலித்தொழிலாளி வாங்கிய 30 ஆயிரம் கடனுக்கு 10 லட்சம் வட்டி போட்ட கந்து வட்டி கும்பல்.. பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ஆதரவு நிர்வாகிகள்..
கூலித்தொழிலாளி வாங்கிய 30 ஆயிரம் கடனுக்கு 10 லட்சம் வட்டி போட்ட கந்து வட்டி கும்பல்..
சேலம்:பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஏழைத் தொழிலாளி குடும்பத்தின் உயிரைக் காவு வாங்க துடித்து, தாரமங்கலம் காவல்துறை
ஒரு தலைபட்சமாக செயல்படும் காவல்துறை மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள சின்னப்பப்பட்டியை பகுதி பழனிகவுண்டனூரையை சேர்ந்தவர் வெங்கடேஷ். கல் உடைக்கும் கூலி வேலை செய்து வரும் நபர் இவர்.தனது குடும்ப பிரச்னைக்காக 30 ஆயிரம் ரூபாயை அப்பகுதியைச் சேர்ந்த ரகு மற்றும் சேட்டு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இரண்டு பைனான்ஸ்சியர்களிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் வெற்று ப்ரோ நோட்டு கொடுத்து வாங்கி உள்ளார்.
பணம் வாங்கியதில் இருந்து எட்டு மாதத்திற்கு வட்டி மட்டும் சுமார் 4 லட்ச ரூபாயை மிரட்டி வாங்கி உள்ளனர்.மீட்டர் வட்டி, மின்னல் வட்டி,நாள் வட்டி, மணிநேர வட்டி என பல்வேறு முறைகளில் கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த இவர்கள் வெங்கடேஷ்சையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வட்டியை தொடர்ந்து வாங்கி வந்து உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் வெங்கடேசன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டி, அவரிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு அதில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக எழுதி வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டும் இன்றி அவர்கள் தன்னுடைய அடியாட்களை அழைத்து வந்து வெங்கடேசன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டி,ஆபாசமாகவும் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.