கூலித்தொழிலாளி வாங்கிய 30 ஆயிரம் கடனுக்கு 10 லட்சம் வட்டி போட்ட கந்து வட்டி கும்பல்..

Total Views : 59
Zoom In Zoom Out Read Later Print

கூலித்தொழிலாளி வாங்கிய 30 ஆயிரம் கடனுக்கு 10 லட்சம் வட்டி போட்ட கந்து வட்டி கும்பல்.. பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ஆதரவு நிர்வாகிகள்..

சேலம்:பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஏழைத் தொழிலாளி குடும்பத்தின் உயிரைக் காவு வாங்க துடித்து, தாரமங்கலம் காவல்துறை

ஒரு தலைபட்சமாக செயல்படும் காவல்துறை மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை. 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள சின்னப்பப்பட்டியை பகுதி பழனிகவுண்டனூரையை சேர்ந்தவர் வெங்கடேஷ். கல் உடைக்கும் கூலி வேலை செய்து வரும் நபர் இவர்.தனது  குடும்ப பிரச்னைக்காக 30 ஆயிரம் ரூபாயை அப்பகுதியைச் சேர்ந்த ரகு மற்றும் சேட்டு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இரண்டு பைனான்ஸ்சியர்களிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் வெற்று ப்ரோ நோட்டு கொடுத்து வாங்கி உள்ளார்.

பணம் வாங்கியதில் இருந்து எட்டு மாதத்திற்கு வட்டி மட்டும் சுமார் 4 லட்ச ரூபாயை மிரட்டி வாங்கி உள்ளனர்.மீட்டர் வட்டி, மின்னல் வட்டி,நாள் வட்டி, மணிநேர வட்டி என பல்வேறு முறைகளில் கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த இவர்கள் வெங்கடேஷ்சையும் அவரது  குடும்பத்தினரையும் மிரட்டி வட்டியை தொடர்ந்து வாங்கி வந்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் வெங்கடேசன்  வலுக்கட்டாயமாக அழைத்து சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டி, அவரிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு அதில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக எழுதி வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டும் இன்றி அவர்கள் தன்னுடைய அடியாட்களை அழைத்து வந்து வெங்கடேசன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டி,ஆபாசமாகவும் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். 

இதனால் மனமுடைந்த வெங்கடேசன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள நினைத்தார்.ஆனால்,தான்மட்டும் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்‌

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உயிர் பிழைக்க வைத்தனர்.ஆனால் கடன் கொடுத்த இரண்டு கந்துவட்டி பார்ட்டியும் அவரது உயிரையும், குடும்பத்தார் உயிரையும் துச்சம் என மதித்து மீண்டும் பணத்தைக் கேட்டு மருத்துவமனையிலேயே வைத்து கடுமையாக மிரட்டி உள்ளனர்.

இது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.ஆனால், எதிர்தரப்பின் அரசியல் ஆதாயம்,பணபலம் அடிப்படையில் போலீசார் வழக்கம்போல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் 'நீ கல் உடைப்பவன்தானே,உனக்கு என்ன வாங்குன காசை கட்ட மாட்டாயா?'

என காவல்துறையினர் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்படுகின்றனர்.பாதிக்கப்பட்ட வெங்கடேசனுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கும் வழியை பார், இல்லையென்றால் சட்டப்படி உன் மீது நடவடிக்கை எடுப்போம்,உன் குடும்பத்தையே உள்ளே வைப்போம் என மிரட்டியதாக  வெங்கடேசன் தெரிவித்தார்.

மேலும் வீட்டில் இருக்கும் பெண்களையும்,கல்லூரி பயிலும் மகனையும் உள்ளே தள்ளி பொய் கேஸ் போடுவேன்,குடும்பத்தையே நிர்மூலம் ஆக்கி விடுவோம் என காவல்துறையினரும், பா.ம‌.க. அன்புமணி ஆதரவு கந்துவட்டிக் கும்பலும் ஒன்றினைந்து  வெங்கடேசனை மிரட்டி வருகின்றனர்.

என்ன செய்வது என்று வழி தெரியாமல் வெங்கடேசனும் அவது குடும்பத்தினரும் நிலைகுலைந்து நிற்கின்றனர்.சேலம் மாவட்ட எஸ்‌.பி‌. கௌதம்கோயல் இந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவும்,இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் தாரமங்கலம் காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என அப்பகுதி பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

See More

Latest Photos