சேலத்தில் திமுகவிற்கு ஆதரவாக தெலுங்கர் சிறுபான்மை பேரவையின் மாநிலத் தலைவர் நாகா அரவிந்த் தலைமையில் வாக்கு சேகரித்த சின்னத்திரை நடிகை உஷா எலிசபெத்..
சேலத்தில் திமுகவிற்கு ஆதரவாக சிறுபான்மை பேரவையின் மாநிலத் தலைவர் நாகா அரவிந்த் தலைமையில் வாக்கு சேகரிப்பு..
சேலம் : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது .அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக சேலம் வடக்கு தொகுதியில்திமுக சார்பில் போட்டியிடும்வேட்பாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக
சின்னத்திரை நடிகை
உஷா எலிசபெத் தொகுதிக்குட்பட்ட சின்ன கடைவீதிகாய்கறி சந்தையில் விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்...அப்போது திமுக அரசின் சாதனை துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.தெலுங்கர் சிறுபான்மை பேரவையின் மாநிலத் தலைவர் நாகா அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சாரத்தில்,தெருவோர தேங்காய் கடையில் அமர்ந்து தேங்காய் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.
நமது தமிழ்நாடு முதலமைச்சரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி பல்வேறு வெளிநாடுகளை ஏற்கும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் காப்பியடித்து திட்டங்களை கொண்டு செல்லும் சூழல் உள்ளது .இந்த நல்லாட்சி தொடர்ந்து மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும். திமுக அரசுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் பேசினார்.