பழனியில் காவல்துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட —14 பேர் கொண்ட போதை கும்பல் கைது..

Total Views : 19
Zoom In Zoom Out Read Later Print

பழனி காவல்துறை இன்று மாபெரும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, ஒரே நாளில் 14 பேர் கொண்ட கும்பலை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி: பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு தனஞ்செயன் அவர்களின் உத்தரவின்படி, நகர் காவல் ஆய்வாளர் திரு மணிமாறன் தலைமையில் காவல்துறை இரண்டு குழுக்களாக பிரிந்து வேட்டையை ஆரம்பித்தது.

ஒரு குழுவை சார்பு ஆய்வாளர் விஜய் வழிநடத்த, அவருடன் செல்வமுத்து, சதாம் உசேன், அருண்குமார், செந்தில் முருகன் உள்ளிட்ட போலீசார் இணைந்தனர்.

மற்றொரு குழுவை சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன் வழிநடத்த, அவருடன் அழகுமணி, மகேஸ்வரன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டனர்.

பழனி திண்டுக்கல் ரோடு இ எஸ் ஐ மருத்துவமனை அருகிலும் மற்றும் பழனி திண்டுக்கல் ரோடு சந்தன தர்ஷனா தியேட்டர் அருகில் ஒரு குழு ஆகிய இரு திசைகளில் இருசக்கர வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர்கள் காவல்துறையை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அதிவேகமாக சுற்றிவளைத்து பிடித்து, அவர்களிடம் சோதனை நடத்தியதில் சுமார் 300 கிராம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

உடனடியாக 14 பேரையும் கைது செய்து, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட நபர்கள்:
சார்பு ஆய்வாளர் திரு விஜய் அவர்களால் பிடிக்கப்பட்ட விற்பனையாளர்கள் 

 பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த  மாரிமுத்து என்பவரின் மகன் ஸ்ரீகுமார் 

 பழனி அடிவாரம் கக்கஞ்சி தெரு பகுதியைச் சேர்ந்த  அன்பழகன் என்பவரின் மகன் சந்துரு 

 பழனி அடிவாரம் சத்தியமூர்த்தி தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் பார்த்தசாரதி

 பழனி ஆயக்குடி ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்த பால முருகேசன் என்பவரின் மகன் புவண்ணன் 

 பழனி ஆயக்குடி ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்த  சங்கர் என்பவரின் மகன் வெற்றிவேல் 

 பழனி TSP கேம்ப் ஜவஹர் நகர் பகுதியில் சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மகன் வினோத் குமார் 

 பழனி புது தாராபுரம் ரோடு சின்னவள் கவுண்டர் வலசு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மணிவேல் 
 இந்தக் குழுவில் இருந்து  150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 

 சார்பு ஆய்வாளர் திரு கிருஷ்ணன் அவர்களால் பிடிக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழு 
பழனி அடிவாரம் பாட்டாளி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பிரதீப் 

 பழனி அடிவாரம் குரும்பபட்டி பாட்டாளி தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் மகேஸ்வரன் 

 பழனி ஆயக்குடி ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்த  செந்தில்குமார் என்பவர் மகன் பிரசாந்த் குமார் 

 பழனி அடிவாரம் லால்பகதூர் சாஸ்திரி தெரு பகுதி சேர்ந்த  கணேசன் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் 

 உடுமலைப்பேட்டை பழனியம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரின் மகன் சூர்யா 

 பழனி தெரசமாள் காலனி  பகுதியைச் சேர்ந்த ராமேஸ்வரன் என்பவரின் மகன் மகேஸ்வரன் 

 ஒட்டன்சத்திரம் அரசபிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்த மகன் அஜய்பிரதாப்குமார் 

 இந்தக் குழுவில் இருந்தும் சுமார் 150 கிராம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது 

 மேலும் இந்த இரண்டு குழுவில் இருந்தும் 6 இரு சக்கர வாகனமும் 7 கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

போதை வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்!
பொது மக்களின் பாதுகாப்பையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, இப்படியான துணிச்சலான நடவடிக்கையை எடுத்த காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 “பழனி காவல்துறை = செயல்திறன் + அதிரடி” என்று மீண்டும் நிரூபித்துள்ளனர்!

இந்த அதிரடி வேட்டையை சிறப்பாக முன்னெடுத்த
திரு தனஞ்செயன் (DSP),
திரு மணிமாறன் (Inspector),
திரு விஜய் & திரு கிருஷ்ணன் (SI)
மற்றும் அனைத்து காவலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

See More

Latest Photos