சேலம் வடக்கு தொகுதி தவெக வேட்பாளரை திட்டமிட்டு அவதூறு செய்யும் எதிர்க்கட்சியினர் என வேட்பாளர் குற்றச்சாட்டு..

Total Views : 22
Zoom In Zoom Out Read Later Print

தலைவர் விஜயின் பாடலை கேட்டு குழந்தைகள் தன் எழுச்சியாக நோட்டீசை எடுத்து நடனம் ஆடினர் இதில் கட்சியின் நிர்வாகிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை..

சேலம் : தளபதி விஜய் மீது கொண்டுள்ள பாசத்தாலும் ஈர்ப்பின் காரணமாக குழந்தைகள் தன்னெழுச்சியாக அவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை தூக்கி செல்வதாகவும் விளக்கம்...தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிவகுமார் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்பொழுது அவர் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். 

அப்பொழுது வாகனங்கள் முழுவதும் விஜயின் பாடல் ஒலிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு சில குழந்தைகள் விஜயின் புகைப்படம் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை எடுத்துக்கொண்டு அவர்களாகவே ஆங்காங்கே கொண்டு சென்ற நிகழ்வு அரங்கேறியது .இதனை ஒரு சில அரசியல் கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி புகார் தெரிவித்து வருவதாகவும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக பரவி வந்தது.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சேலம் வடக்கு தொகுதி தவெக வேட்பாளர் சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில்,நாங்கள் 12 ஆவது டிவிஷன் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது விஜயின் பாடல் ஒளிபரப்பு செய்துதான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.அப்பொழுது குழந்தைகள் அவர்களாக ஆர்வத்துடன் வந்து விஜயின் புகைப்படம் இருந்த துண்டு பிரசுரங்களை எடுத்துக் கொண்டு அவரவர்களே பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்வது போல் கொண்டு நோட்டீசை ஆங்காங்கே கொடுத்தனர். இது எங்களுக்கு தெரியாது. நாங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகிறோம்.

எங்களுடைய தளபதியும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். நாங்களும் அரசியல் தெரிந்தவர்கள்தான். 18 வயதுக்கு கீழ் உள்ள யாரையும் பிரச்சாரத்தில் நாங்கள் ஈடுபடுத்துவதில்லை. எதிர்க்கட்சியினர் இதை வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் பரப்ப விட்டு வருகின்றனர் என்றார்.

See More

Latest Photos