மலைவாழ் மக்களுக்கு உதவிய திமுக கவுன்சிலர்...

Total Views : 22
Zoom In Zoom Out Read Later Print

சேலம் கந்தாஸ்ரமம் மலையின் நடுவில் குடியிருந்து வந்த சித்ரா என்பவர் இன்று காலை இயற்கை மரணம் அடைந்தார்.. அமரர் ஊர்தியுடன் சென்று அவரை ஏற்றி வந்து நல்லடக்கம் செய்த திமுக கவுன்சிலர் தெய்லிங்கம்..பொதுமக்கள் பாராட்டு...

சேலம் : அம்மாபேட்டை கந்தாஸ்ரமம் மலையில் நடுவில் குடியிருந்து வந்த சித்ரா வயது 70 என்பவர் இன்று காலை இயற்கை மரணம் அடைந்த நிலையில் அவரின் உறவினர்கள் மலை உச்சியில் இருந்து பிரேதத்தை எப்படி இறக்கி அடக்கம் செய்வது  என தெரியாமல், தவித்த நிலையில், இந்த தகவல் திமுக 9-வது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனது நண்பர்களுடன்  சம்பவ இடத்திற்கு  சென்ற திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம், அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து முதியவர் சித்ராவை உடலை நண்பர்கள் உதவியுடன் காக்காயன் மயானத்தில் தனது சொந்த முயற்சியில் நல்லடக்கம் செய்தார். இதையடுத்து இவருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


See More

Latest Photos