பழனி காவல்துறை இன்று மாபெரும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, ஒரே நாளில் 14 பேர் கொண்ட கும்பலை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் காவல்துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட —14 பேர் கொண்ட போதை கும்பல் கைது..
பழனி: பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு தனஞ்செயன் அவர்களின் உத்தரவின்படி, நகர் காவல் ஆய்வாளர் திரு மணிமாறன் தலைமையில் காவல்துறை இரண்டு குழுக்களாக பிரிந்து வேட்டையை ஆரம்பித்தது.
ஒரு குழுவை சார்பு ஆய்வாளர் விஜய் வழிநடத்த, அவருடன் செல்வமுத்து, சதாம் உசேன், அருண்குமார், செந்தில் முருகன் உள்ளிட்ட போலீசார் இணைந்தனர்.
மற்றொரு குழுவை சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன் வழிநடத்த, அவருடன் அழகுமணி, மகேஸ்வரன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டனர்.