பர்கூர் அடுத்த ஒப்பதவாடி கூட்ரோடு அருகே லாரி நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி பணம் மற்றும் செல்போன் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
பர்கூர் அடுத்த ஒப்பதவாடி கூட்ரோடு அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒப்பதவாடி கூட்ரோடு அருகே சர்வீஸ் ரோட்டின் நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த லாரி டிரைவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பர்கூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு அன்பழகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் எடுத்த துரித நடவடிக்கையில் வழிப்பறியில் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தனர்.
காதர் பாஷா (20) நாயுடு தெரு லண்டன் பேட்டை கிருஷ்ணகிரி, விஷ்ணு (24) செந்தூர் முருகன் கோயில் தெரு பழைய பேட்டை கிருஷ்ணகிரி, பொன் குமார் (20) மோகன் ராவ் காலனி பழைய பேட்டை கிருஷ்ணகிரி, ஜேம்ஸ் (23) கரடி கொல்லப்பட்டி பெருகோப்பன பள்ளி பர்கூர் முரளி (24) பசுல்லா நகர்,பழைய பேட்டை கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து நபர்களை பர்கூர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து அவர்கள் லாரி ஓட்டுனரிடம் வழிப்பறி செய்யப்பட்ட ரூபாய் 13 ஆயிரத்து 800 செல்போன் ஒன்று குற்றச் செயலில் ஈடுபட்ட மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கிருஷ்ணகிரி நீதிபதி அவர்களிடம் ஆஜர் படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார் உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளையும் தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் பர்கூர் காவல்துறையினருக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்