விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலம் கூட போகாது !ஓசூர் பிரசாரத்தில் வேட்பாளர் சத்யா உறுதி...

Total Views : 8
Zoom In Zoom Out Read Later Print

அறிவுசார் வழித்தடத்திற்கு, விவசாய நிலங்-களை அரசு கையகப்படுத்த போவதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். விவசாயிகள் மற்றும் மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம்,'' என, ஓசூர் பிரச்சாரத்தில் வேட்பாளர் சத்யா பேசினார்.

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சத்யா, தீவிர ஓட்டு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார். குறிப்பாக, திப்-பேப்பள்ளி, ஆபிரி, சுண்டட்டி, ஆலுார், தின்னுார், கதிரேப்பள்ளி, பேரண்டப்பள்ளி, மோரனப்பள்ளி, அனுமந்தபுரம், சாமனப்பள்ளி, ஒன்னல்வாடி, ஜொனபெண்டா, காரப்பள்ளி உட்பட, 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தாய்மார்கள், பெண்கள் வெளியே வந்து வேலைக்கு செல்கிறார்கள், பள்ளி, கல்லுாரிக-ளுக்கு சென்று படிக்கின்றனர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது. பெண்கள் அர-சியல் களத்தில் உள்ளனர். 

உள்ளாட்சியில் பெண்-களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்-டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் தி.மு.க., தான். மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க., அரசு மக்க-ளுக்கு எதுவும் செய்யவில்லை. ஓசூர் பத்தலப்-பள்ளியில், 50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு இல-வசமாக பஸ் பயணத்தை வழங்கியுள்ளார். பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைத்து வருகிறது. அதை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். 

 அதை கண்டிப்பாக செய்து கொடுப்பார். எனவே அனைவரும் வரும், 23ம் தேதி உதயசூ-ரியன் சின்னத்திற்கு ஓட்டளித்து, தி.மு.க.,வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். ஓசூரில், 100 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி கொடுத்துள்ளோம்

தேர்-தலை காரணம் காட்டி, அ.தி.மு.க., பொதுச்செய-லாளர் இ.பி.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை நிறுத்த பார்த்-தனர். இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், முன்கூட்-டியே மகளிர் உரிமைத்தொகையுடன், கோடை கால சிறப்பு நிதியும் சேர்த்து மகளிர் வங்கி கணக்கில், 5,000 ரூபாய் வரவு வைத்து விட்டார். எஸ்.டி.ஆர்.ஆர்., சாலையை சுற்றி, அறிவுசார் வழித்தடத்திற்கு விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த போவதாக பொய் கூறி வருகின்-றனர். இதை விவசாயிகள், பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். 

விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலம் கூட போகாது. பொய் பிரச்சாரம் செய்பவர்-களை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

See More

Latest Photos