சேலம் ஆத்தூர் அருகே கூடுதல் வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்கி பயணித்த போக்குவரத்து அமைச்சர், பள்ளி மாணவர்கள் மற்றும் மலை கிராமமக்கள் பேருந்திற்கு ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்,..
அரசு போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் ஆ,பார்த்திபன்
சேலம் ஆத்தூர் அருகே கூடுதல் வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்கி பயணித்த போக்குவரத்து அமைச்சர், பள்ளி மாணவர்கள் மற்றும் மலை கிராமமக்கள் பேருந்திற்கு ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்,..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலை கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள், பழங்குடியினர், மாணவ, மாணவியர்கள், பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் அன்றாட வாழ்க்கையை கருத்தில் கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து வழித்தடம் நீட்டித்து தரக்கோரி மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்,அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம், பெரிய கல்வராயன் மலை தலக்கரை பகுதியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் சேலம் கோட்டத்தின் சார்பில் கருமந்துறை மழைவாழ் கிராமங்களான தலக்கரை, பாச்சாடு பகுதி மலைவாழ் மக்கள், மகளிர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில் வழித்தடத்தை நீட்டிப்பு செய்யப்பட்ட புறநகர் பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் ஆ,பார்த்திபன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் மாணவர்கள் தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தனர்,
இதனிடையே புறநகர் பேருந்து வழித்தட நீட்டிப்பு, ஆத்தூரிலிருந்து தும்பல், கருமந்துறை வழியாக சூலாங்குறிச்சி வரை இயக்கப்படும் பேருந்தை சூலாங்குறிச்சியிலிருந்து வழித்தடம் நீட்டித்து தலக்கரை, பாச்சாடு கிராமங்களுக்கு காலை 7.35 மணிக்கும், மாலை 5.40 மணிக்கும் பேருந்து வசதி தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் மழைவாழ் மக்கள் கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்திற்கு ஆராத்தி எடுத்தி உற்சாகம் அடைந்தனர்,
இன்னிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்,