தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலம்பொருந்திய அணியாக கட்டமைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். இந்த நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான விடியல் சேகரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
தவெக “எங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி தான்!” - தமாகா விடியல் எஸ்.சேகர் விருப்பம்...
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், வரும் 20-ம் தேதி தனது இயக்கத்தை தமாகா-வுடன் இணைக்கவுள்ளார். அவர் மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, தமிழ் ஆர்வலர், தேசிய சிந்தனைவாதி. உலகப் பொருளாதாரம், அரசியல் வரலாறுகளைத் தெரிந்த அவர், இணைவது தமாகா-வுக்கு பலமும், பெருமையும் சேர்க்கும். தமாகா-வின் வளர்ச்சிக்கு வித்திடும்.
ஓபிஎஸ்ஸும் டிடிவி.தினகரனும் பாஜக அணியை விட்டுப் போனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்... அவர்களை மீண்டும் உள்ளே கொண்டுவர முயற்சி எடுக்கிறீர்களா?நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து, தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. அவரதுதலைமையில் பாஜக, தமாகா கூட்டணி அமைத்துள்ளது. ஓபிஎஸ், டிடிவி.தினகரனை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்டிஏ முடிவு செய்யும்.
விசிக, நாதக போல் தமாகாவும் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு அங்கீகாரம் பெறுவது எப்போது?
எம்பி பதவிக்காகத்தான் அதிமுக - பாஜக கூட்டணியில் வாசன் இருப்பதாகச் சொல்கிறார்களே..?
அதிமுக - பாஜக கூட்டணி மாதக் கணக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறதே..?
என்டிஏ ஆட்சி அமைத்தால் அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா..?