தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழலை வலியுறுத்தி மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

Total Views : 518
Zoom In Zoom Out Read Later Print

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபிர் மற்றும் சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள் அறிவுறுத்தலின்படி சேலம் மாவட்டம் தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

இன்றைய சவாலான காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகள், புதுப்பிக்க முடியாத வளங்களான எரிபொருளை அதிகளவு பயன்படுத்தாத மிதிவண்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து,எரிபொருளை குறைக்கும் நோக்கோடு மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது.பொதுமக்களிடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும்,எரிபொருளை குறைக்கவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்க மிதிவண்டியை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.அப்போது மாணவிகள் நெகிழி பயன்பாடு குறைப்பு,துணிப்பையை அதிகம் பயன்படுத்துதல் மற்றும் மஞ்சப்பைக்கு மாறுதல், மிதிவண்டியை பயன்படுத்தி எரிபொருள் பயன்பாடு குறைத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன்,சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வம் மற்றும் சங்ககிரி மாவட்ட கல்வி ஆய்வாளர் நடராஜன்,தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி,வட்டார வளமை மேற்பார்வையாளர் சங்கர்,சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் பொன்மதி,இராமிரெட்டிப்பட்டி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கலந்து கொண்டனர்.

See More

Latest Photos