மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் அனைத்து விவசாயி சங்கங்களின் ஆர்ப்பாட்டம் ....

Total Views : 32
Zoom In Zoom Out Read Later Print

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் அனைத்து விவசாயி சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை:கடந்த ஜனவரி 17, 18 தேதிகளில் பருவம் தவறி பெய்த கனமழைக்கு நிவாரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த ரூ 63 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க கோரி விவசாய சங்கம் நகல் எரிப்பு போராட்டம்.

ஆர்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை வகித்தார் ஆர்பாட்டத்தில் பயிர் இன்சுரன்ஸ் வழங்க ஜி.பி.ஆர்.எஸ் கருவியை பயன்படுத்த கூடாது என்றும்.கடந்த ஜனவரி மாதம் 17, 18, தேதிகளில் பருவம் தவறி பெய்த கனமழைக்கு நிவாரணமாக மாவட்ட நிர்வாகம் அனுப்பிய ரூ 63 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க கோரியும். 

மத்திய அரசின் விவசாய தொழிலாளர்களின் விரோத மசோதாவை நீக்க கோரியும் 200 க்கு மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர் மத்திய அரசின் விவசாயி விரோத விதை மசோதாவை கண்டித்து முழக்கமிட்டு நகல் எரிப்பு போராட்டம் செய்தனர் நிறைவாக இயற்கை விவசாயி இராமலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.

See More

Latest Photos