சேலம் தலேமா மின்னணு தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் சார்பில் தமிழகம் தழுவிய போராட்டம் அறிவிப்பு..

Total Views : 454
Zoom In Zoom Out Read Later Print

சேலம் தலேமா மின்னணு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் பொது மேலாளரை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் மற்றும் பாரதிய தொழிலாளர் சங்கம், தலேமா மின்னணு தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் சார்பில் தமிழகம் தழுவிய போராட்டம் அறிவிப்பு...

சேலம்:சேலம் சூரமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தலேமா எலக்ட்ரானிக் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1998 தொடங்கப்பட்டு 27 ஆண்டு காலம் ஆகி உள்ளது. இதில் ஆண்,பெண் தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் புதியதாக வந்த பொது மேலாளர் ஸ்டீபன் பெர்னாண்டஸ் என்பவர் கம்பெனியை மூடுவதாகவும், பணி செய்யும் தொழிலாளர்களை ஆள் குறைப்பு செய்வதாகவும், இதற்கு முன்னால் இருந்த பொது மேலாளர் தொழிலாளருக்கு சலுகைகளையும், உதவிகளையும் செய்து வந்ததாகவும் புதியதாக வந்த பொது மேலாளர் எந்த சலுகைகளும் செய்யவில்லை என்றும் தொழிலாளர்கள் சார்பில் பல துறைகளில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வந்துள்ளதாகவும்,  இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த நிறுவனத்தின் முன்பு தொழிலாளர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை சங்க செயலாளர் தங்கம் மற்றும்  தொழிலாளர் சங்க தலைவர் வெங்கடேஷ் கூறும் போது, இந்த நிறுவனத்தில் பல்வேறு அநியாயங்கள் நடந்து தொழிலாளர்கள் குடும்பங்களின் வயிற்றில் அடித்து வரும் அநியாயம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது இதுகுறித்து.

இதை அந்த நிறுவனம் சரி செய்யாவிட்டால் விரைவில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் அவர்களின் தலைமையில் தமிழக முழுவதும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்கள்.

See More

Latest Photos