சேலம்: சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு கைதிகளிடம் குறைகளை கேட்டார் சிறையில் இருந்த நாய் கைகூப்பி வரவேற்பு கொடுத்தது...
சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு..
திருச்சி சரக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ஜெயபாரதி கோவை சரக டிஜியாக இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கே இருந்த நாய் அவருக்கு இருகரம் கூப்பி வரவேற்பு கொடுத்தது.
சிறைத் தொழிற்சாலை, மருத்துவமனை, சமையலறை என அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.சில கைதிகள் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மனு கொடுத்தனர்.
சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு செய்த போது சிறை கண்காணிப்பாளர் வினோத் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.